ஓமானில் நடைபெறவுள்ள Legends Leagues கிரிக்கெட் போட்டியில், Asian Lions அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அர்ஜுண ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக மரியோ வெல்லவராயன் செயற்படவுள்ளார்.
Asian Lions அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், டி.எம்.டில்ஷான், முத்தையா முரளிதரன், ரொமேஷ் களுவிதாரன, சமிந்த வாஸ், உபுல் தரங்க மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் ஓமான் நோக்கி ஏற்கனவே பயணித்துள்ளனர்.
அத்துடன், சனத் ஜயசூரிய, அஜந்த மென்டீஸ், தில்ஹார பெர்ணான்டோ ஆகியோர் நாளை (19) ஓமான் நோக்கி பயணிக்கவுள்ளனர்.
Asian Lions அணியின் தலைவராக முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவரான மிஸ்பா உல்ஹக் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)