இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 1985ம் ஆண்டு, கொழும்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளை அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அவுஸ்திரேலியா − விக்டோரியா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரும், முன்னணி நடுவருமான ஜேமி மிட்செல் செய்ய முறைபாட்டை அடுத்தே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனக்கு ஊசியொன்று செலுத்தியதன் ஊடாக, தான் சுய நினைவை இழந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள், விமானத்திற்கு செல்வதற்காக தன்னை சிலர், குளிப்பாட்டியதாக அவர் கூறியுள்ளார்.
அந்த காலப் பகுதியில் கிரிக்கெட் அணியின் வைத்தியராக செயற்பட்ட டொக்டர் மெல்கம் மெக்கன்ஸியினால் தனக்கு ஊசி செலுத்தப்பட்டதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
டொக்டர் மெல்கம் மெக்கன்ஸி, 1998ம் ஆண்டு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்த நாட்டு பெடரல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.