க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறுகிறது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை நீண்ட கால தாமதமான பரீட்சை என்பதால், இதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் வைத்தியசாலை பரீட்சை நிலையமாக செயற்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.