புத்தளம் − வென்னப்புவ − போலவத்த கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து பழைமை வாய்ந்த மயானமொன்றின் வடுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த தேவாலயத்தில் நிர்மாணப் பணிக்காக இன்று (17) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, நிர்மாணப் பணிகளை மேற்கொண்டவர்களுக்கு சடலமொன்று புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சடலம் எந்த காலப் பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த தேவாலயத்தின் பாதிரியார் தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், இந்த மயான வடுக்களானது, கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. (TrueCeylon)