Tamil news Sri Lanka

CIDயின் 5வது மாடியில் பாய்ந்து தற்கொலை செய்த பெண் l விசாரணை ஆரம்பம்


குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து, பெண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைத் தந்த பெண்ணொருவரெ, இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

 

60 மில்லியன் ரூபா நிதி மோசடி ஒன்று தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இந்த பெண், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவத்தில் 46 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

திடீரென மேல் மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் படை!

Rohan

”பேட்ட” திரைப்படத்தில் அழிக்கப்பட்ட வீடியோ l வெளியிட்டது SUN TV (VIDEO)

Rohan

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓர் அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy