Tamil news Sri Lanka

கொழும்பு நீர்நிலைகளில் இன்று (10) மூன்றாவது சடலமும் கண்டெடுப்பு (PHOTOS)


கொழும்பு நீர்நிலைகளிலிருந்து இன்று (10) மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி ஆகிய பகுதிகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று காலை கரையொதுங்கியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு கரையொதுங்கிய சடலங்கள் உருகுலைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு சடலங்கள் மீதான நீதவான் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து, சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, கொலன்னாவ எரிபொருள் கூட்டுதாபன வளாகத்திலுள்ள கால்வாயிலிருந்து மற்றுமொரு ஆண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சடலமும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை  என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)

தொடர்புடைய செய்தி :- வெள்ளவத்தை, பம்பலபிட்டி கரையோர பகுதிகளில் இரண்டு சடலங்கள்



Source link

Related posts

“ஆர்ப்பாட்டத்திற்கான தடையை நீக்குங்கள்” பிரதமரிடம் சஜித் கோரிக்கை

Rohan

இலங்கையர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது ஏன்? வெளிவந்தது உண்மைக் காரணம்

Rohan

BREAKING NEWS :- அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கான புதிய சுற்று நிரூபம் வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy