Tamil news Sri Lanka

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க நொவேன் ஜோகெகவிச்சிற்கு அனுமதி – நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு


உலக முன்னணி டெனிஸ் வீரரான நொவேன் ஜோகெகவிச்சின் விஸாவை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த தீர்மானமானது, முறையற்றது என அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நொவேன் ஜோகெகவிச்சிற்கு அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பகிரங்க டெனிஸ் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காகவே நொவேன் ஜோகெகவிச், அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரை நோக்கி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயணித்திருந்தார்.

எனினும், கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததை காரணம் காட்டி, அவரை நாட்டிற்குள் அனுமதிக்க அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இடமளிக்கவில்லை.

இவ்வாறான நிலையில், நொவேன் ஜோகெகவிச், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, வழக்கறிஞரின் ஊடாக மேன்முறையீடு செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி :- SPORTS BREAKING :- நொவேன் ஜோகொவிச்சின் விஸாவை ரத்து செய்து, நாடு கடத்த முயற்சிக்கின்றது அவுஸ்திரேலியா



Source link

Related posts

எச்சரிக்கை விடுக்கும் எதிர்கட்சி – Trueceylon News (Tamil)

Rohan

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

Rohan

இறுதி வாக்கெடுப்பு இன்று

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy