Tamil news Sri Lanka

SPORTS BREAKING :- நொவேன் ஜோகொவிச்சின் விஸாவை ரத்து செய்து, நாடு கடத்த முயற்சிக்கின்றது அவுஸ்திரேலியா


அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக வருகைத் தந்த உலகின் முதல் நிலை டெனிஸ் வீரரான நொவேன் ஜோகொவிச்சின் விஸாவை ரத்து செய்வதற்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்திற்கு வருகைத் தந்த நிலையிலேயே, அவரது விஸா ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நொவேன் ஜோகொவிச், அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு தேவையான நுழைவு விதிமுறைகளை முழுமைப்படுத்தாத நிலையிலேயே, அவரது விஸா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நொவேன் ஜோகொவிச்சை, அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், நொவேன் ஜோகொவிச்சின் சட்டத்தரணி, நீதிமன்றில் அவசர மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் விமானத்தில் ஆசனமொன்று கிடைக்கும் வரை, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நடத்திச் செல்லப்படும் முகாமொன்றில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நொவேன் ஜோகொவிச் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பகிரங்க டெனிஸ் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக அவருக்கு நிவாரண காலத்தை வழங்க அந்த நாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவுஸ்திரேலிய பிரஜைகள், அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நொவேன் ஜோகொவிச், கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்த நபர் என்பதுடன், அவருக்கு ஒரு முறை கொவிட் வைரஸ் தொற்றியுள்ளது.

நொவேன் ஜோகொவிச்சின் தாயகமான சைபீரியா, அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நொவேன் ஜோகொவிச்சை மனதளவில் சித்திரவதைக்கு உட்படுத்தும் செயலாகவே தாம் இதனை கருதுவதாகவும், அவருக்காக தமது நாடு குரல் கொடுக்கும் எனவும் சைபீரியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

Rohan

உள்நாட்டு விமான சேவையொன்றுக்கு மறுஅறிவித்தல் வரை முற்று முழுதாக தடை

Rohan

கொழும்பு மாவட்ட G.C.E.(A/L) மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy