Tamil news Sri Lanka

பால்மா பிரச்சினை எப்போது தீரும்? – Trueceylon News (Tamil)


இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு சந்தையில் காணப்படும் தட்டுப்பாடு, இந்த மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமுதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலருக்கான பிரச்சினையே, பால்மா தட்டுப்பாடு ஏற்பட காரணம் என அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக்க பண்டார தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், இந்த மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத முதல் பகுதியில் பால்மா ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை, கடந்த மாதம் 31ம் திகதி முதல் மீண்டும் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் புதிய விலையாக 1,345 ரூபாவும், 400 கிராம் பால்மாவின் புதிய விலையாக 540 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டது. (TrueCeylon)



Source link

Related posts

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் சீன தூதரகம் வெளியிட்ட TWITTER பதிவு

Rohan

தடுப்பூசி செலுத்தும் பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள்

Rohan

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy