Tamil news Sri Lanka

சபாநாயகரிடம், ரணில் விடுத்த விசேட கோரிக்கை – Trueceylon News (Tamil)


எதிர்வரும் 18ம் திகதி பாராளுமன்றத்தின் புதிய சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பிலான சபை ஒத்தி வைப்பு மீதான விவாதமொன்றை நடத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம், ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கடந்த டிசம்பர் மாதம் 13ம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதன்படி, புதிய சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை முடிவடைந்ததை அடுத்து, ஜனவரி மாதம் 19,20 மற்றும் 21ம் திகதிகளில் இந்த சபை ஒத்தி வைப்பு மீதான விவாதத்தை நடத்த முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

“கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் நோய் ஏற்படும் சாத்தியம்”

Rohan

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாததால் 7,000 கோடி ரூபா நட்டம்! இக்கட்டான நிலையில் இலங்கை

Rohan

பிறப்பிலிருந்தே முள்ளந்தண்டு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி க.பொ.த சாதாரண தரத்தில் சாதித்தார்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy