Tamil news Sri Lanka

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த ஆண்டு கிரிக்கெட் அட்டவணை வெளியானது


2022ம் ஆண்டு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் சுற்றுப் பயணம் தொடர்பிலான அறிவிப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நேற்று (05) அறிவித்தது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி 2022ம் ஆண்டு முதலாவதாக சிம்பாப்வே அணியுடன் மோதவுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த மாதம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களதேஷ் ஆகிய அணிகளுடன் இலங்கை அணி மோதவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் இலங்கை அணியுடனான போட்டிகளுக்காக அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது ஆசிய கிண்ணத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியுடன் 3 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி மோதவுள்ளது.

இந்த போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கைக்கு ஜுலை மாதம் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர், ஜுலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணி பங்குப்பற்றவுள்ளது.

இந்த போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக இலங்கை அணி, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் இலங்கை அணி, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. (TrueCeylon)

SRI LANKA CRICKET

 



Source link

Related posts

புத்தகயா மீது குண்டுத் தாக்குதல் l குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு

Rohan

சஹ்ரானின் உதவியாளர்களுடன் தொடர்பு! ஒருவர் அதிரடி கைது

Rohan

ஹிஷாலினி உயிரிழந்த வழக்கிலிருந்து தப்பினாரா ரிஷாட்டின் மனைவி? வெளியான புதிய செய்தி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy