Tamil news Sri Lanka

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலருக்கு நிகரான ரூபாவை 240 ரூபாவிற்கு வழங்குமாறு யோசனை


புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 240 ரூபா வரை அதிகரிக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

அமைச்சரவையில் இந்த யோசனையை தான் முன்வைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பணம் தற்போது கிடைப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கறுப்பு சந்தையில் 240 முதல் 245 வரையான பெறுமதியில் டொலர் மாற்றப்படுவதாகவும், வங்கிகளில் 203 ரூபாவிற்கே டொலர் மாற்றப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

203 ரூபாவிற்கு டொலரை மாற்றுவதற்கு எந்தவொரு புலம்பெயர் தொழிலாளர்களும் விரும்புவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே, தான் இந்த யோசனையை முன்வைத்ததாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

பிரித்தானியாவில் 4 இலங்கையர்களின் உயிர்களை காவுக்கொண்ட தீ (PHOTOS)

Rohan

T20 உலகக் கிண்ணம் :- அரையிறுதி போட்டிக்கு தெரிவான 4 அணிகள்

Rohan

தெற்கு அதிவேக வீதியில் பாரிய விபத்து l கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy