Tamil news Sri Lanka

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறும் மற்றுமொரு இலங்கை அணி வீரர்


இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக்க ராஜபக்ஸ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பானுக்க ராஜபக்ஸ, தனது ஓய்வூ கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கடந்த திங்கட்கிழமை கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உடற்தகுதி நியமங்களுடன், எதிர்வரும் காலங்களில் விளையாட முடியாது என பானுக்க ராஜபக்ஸ தனது கடிதத்தில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பானுக்க ராஜபக்ஸவிடமிருந்து அவ்வாறான ஒரு கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

Rohan

இந்த இரு தடுப்பூசிகளையும் போட்டால் 4 மடங்கு அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

Rohan

எதிர்வரும் மூன்று வாரங்களில் இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy