Tamil news Sri Lanka

”அதிஷ்ட இலாப சீட்டில் பரிசு தற்போது கிடைப்பதில்லை?” (VIDEO)


அதிஷ்ட இலாப சீட்டில் தற்போது பலருக்கு பரிசுகள் கிடைப்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.

அத தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”மொக்கத்த உனே?” நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனமையானது, அதிஷ்ட இலாப சீட்டில் பரிசு கிடைத்ததை போன்றது என வெளியிட்ட கருத்து குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு சுசில் பிரேமஜயந்த பதிலளித்தார்.

”அன்று நான் சந்தைக்கு சென்ற வேளையில், அதிஷ்ட இலாப சீட்டை எடுத்தேன். பலருக்கு இந்த காலத்தில் அதிஷ்ட இலாப சீட்டில் பரிசு கிடைப்பதில்லை” என அவர் பதிலளித்தார்.

அமைச்சர்களும் அதிஷ்ட இலாப சீட்டை கொள்வனவு செய்கின்றார்களா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, ”அனைத்து அமைச்சர்களும் அதிஷ்ட இலாப சீட்டை கொள்வனவு செய்வதில்லை. அவர்களுக்கு அதிஷ்ட இலாபம் ஏற்கனவே கிடைத்துள்ளது” என கூறினார்.



Source link

Related posts

7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு! இலங்கைக்கு பாதகமா?

Rohan

பைசர் செலுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வைத்தியர் விளக்கம்

Rohan

சிறுவன் செலுத்திய வாகனம் 4 வாகனங்களுடன் மோதியதில் ஒருவர் பலி l மூவர் காயம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy