Tamil news Sri Lanka

2022ம் ஆண்டின் முதலாவது தேர்தல் பெறுபேறு வெளியானது – மைத்திரிபால சிறிசேன (VIDEO)


ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதன் ஊடாக மாத்திரம், 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பவங்களை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

நாட்டு மக்களின் துயரங்களை அறிந்து, சரியான முறையில் அரசாங்கம் செயற்படும் பட்சத்தில் மாத்திரமே, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள வெடிப்பை தடுத்து நிறுத்த முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

விவசாயம் மற்றும் விவசாயிகளை முழுமையாகவே இல்லாது செய்து விட்டார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட சுசில் பிரேமஜயந்தவை, 24 மணித்தியாலங்களில் வெளியேற்றிய அரசாங்கத்தினால், நிமல் லங்சாவை வெளியேற்ற முடியாது எனவும் குறிப்பிட்டார்.

நிமல் லங்சா, அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்ததாகவும், அவரை அரசாங்கம் வெளியேற்றாது எனவும் அவர் கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி பீடத்திற்கு ஏறுவதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 69 லட்சம் வாக்குகளும் அந்த கட்சிக்கு மாத்திரம் சொந்தமானது கிடையாது என மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது கூட்டமைப்பு என கூறிய அவர், அந்த கூட்டமைப்பிலுள்ள பெரிய கட்சி தமது கட்சியே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022ம் ஆண்டின் முதலாவது தேர்தல் பெறுபேறு இன்று வெளியாகியுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.

ஜனாதிபதியினால், சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டமையே, அந்த தேர்தல் பெறுபேறு எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

இந்தியாவில் கைதான இலங்கை நிழலுலக தலைவர் – Trueceylon News (Tamil)

Rohan

உடைப்பெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம் : விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்

Rohan

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கிண்ணம் சீசெல்ஸ் வசமானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy