Tamil news Sri Lanka

தெஹிவளை கடலில் முதலையை பிடிக்க பாரிய பிரியத்தனம்


தெஹிவளை கடலில் சுழியோடியொருவரை தாக்கிய முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

கலப்பு பகுதியிலிருந்தே இந்த முதலை கடலை நோக்கி வருகைத் தந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குறித்த முதலை நடுகடலுக்கு சென்றுள்ளமையினால், அதனை பிடிப்பதற்கு பாரிய பிரியத்தனம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தெஹிவளையில் நேற்றைய தினம் இருந்த முதலை, இன்று வேறொரு பகுதியை நோக்கி சென்றிருக்கக்கூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிடுகின்றார்.

முதலை நடுகடலில் இருப்பதற்கான சாத்தியம் தற்போது கிடையாது என கூறிய அவர், அந்த முதலை கலப்பை நோக்கி வருகைத் தந்திருக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.

இந்த முதலையை பிடிப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தான் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கடற்படை மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கூறுகின்றார்.

தெஹிவளை கடலில் வரலாற்றில் முதல் தடவையாக முதலையொன்று வருகைத் தந்துள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் வண்ண மீன்களை பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பல சுழியோடிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு தமது தொழிலை செய்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

இருளில் மூழ்கிய பல பகுதிகள்! இடியுடன் கூடிய மழையால் மக்கள் பெரும் அவதி

Rohan

இன்று முதல் மின்சாரம் துண்டிப்பு l எவ்வாறு துண்டிக்கப்படும்? அறிவிப்பு வெளியானது

Rohan

கொரோனாவின் உண்மையை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர் சீனாவில் உயிருக்கு போராட்டம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy