Tamil news Sri Lanka

இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அதிசொகுசு ஜெட் விமானங்கள் (VIDEO)


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வார காலமாக 2 அதிசொகுசு ஜெட் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜெட் விமானங்களில் ஒன்று, சுவிஸர்லாந்திலிருந்து மாலைதீவு வழியாக இலங்கையை வந்தடைந்துள்ளது.

மற்றைய ஜெட் விமானம் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நேரடியாக வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு அதிசொகுசு ஜெட் விமானங்களும், கடந்த 28ம் திகதியே நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஜெட் விமானத்தில் வருகைத் தந்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை பாதுகாப்பு காரணங்களினால் வெளியிட முடியாது என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளதாக நியூஸ் பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

குழந்தைகள் பிறந்தவுடனேயே, தேசிய அடையாளஅட்டை? – Trueceylon News (Tamil)

Rohan

T20 உலகக் கிண்ண போட்டி ஆரம்பத்தில் உயிரிழந்த முக்கிய நபர்

Rohan

சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பஹ்ரைன்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy