Tamil news Sri Lanka

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது மின்சாரம் l பாதிப்புக்கள் ஒரே பார்வையில்


நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம், சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.

பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் சுமார் 11.30 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இதையடுத்து, நாட்டின் பல்வேறு நடவடிக்கைகள் ஸ்தம்பிதடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

மின்சார விநியோகம் தடைப்பட்டமையினால், நாட்டின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகமும் தடைப்பட்டிருந்ததாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்திருந்தது.

அத்துடன், மின்சார விநியோகம் தடைப்பட்ட நிலையில், கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

மேலும், வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிராமையினால், பிரதான நகரங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மூடப்பட்டிருந்ததுடன், வங்கி கட்டமைப்புக்களின் பண பரிமாற்று நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், வர்த்தக நிலையங்களில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டமையினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான நிலையில், மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

கடுமையான தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஜனாதிபதி

Rohan

மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாக்க புதிய நடைமுறைகள் அறிமுகம் – Trueceylon News (Tamil)

Rohan

பாடசாலை ஆரம்ப தினத்தில் ஆசிரியர்களின் முடிவு l வெளியானது அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy