Tamil news Sri Lanka

FACEBOOKயை வைத்து சீனா ஆடிய ஆட்டம் l 500 கணக்குகள் முடக்கம்


சீனாவில் இயங்கிய சுமார் 500ற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான “மெடா பிளட்போர்ம்” முடக்கியுள்ளது.

கொவிட்−19 ஆரம்பம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செய்திகளை இந்த போலி கணக்குகளின் ஊடாக பகிர்ந்து வந்துள்ளமை கண்டறியப்பட்ட நிலையிலேயே, பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சுவிஸர்லாந்து விஞ்ஞானியான வில்சன் எட்வர்ட் என்பவரின் பெயரில் போலி கணக்குகளை ஆரம்பித்து, போலி தகவல்களை பரப்பி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு போலி பேஸ்புக் கணக்குகளின் ஊடாக வெளியிடப்பட்ட தகவல்களை, சீன அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பேஸ்புக் மாத்திரமன்றி, இன்ஸ்ட்ராகிரேம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இவ்வாறான போலி தகவல்கள் பகிரப்பட்டுள்ளதுடன், அந்த கணக்குகளையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.



Source link

Related posts

“அரசாங்கம் அனைத்தையும் குழப்பிக்கொண்டுள்ளது” :− மைத்திரிபால சிறிசேன

Rohan

இரண்டாவது நபரும் உயிரிழப்பு – Trueceylon News (Tamil)

Rohan

பாடசாலைகளை ஆரம்பிக்கின்றமை தொடர்பில் கல்வி அமைச்சு இன்று (24) வெளியிட்ட தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy