Tamil news Sri Lanka

ஒரு வீட்டில் வெடித்தால் முழு தொடர் குடியிருப்புகளும் அழித்து விடும் அபாயம்!


மலையகத்தை பொறுத்தளவில் பெரும்பாலான மக்கள் தொடர் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டால் முழு தொடர் குடியிருப்பினையே அது அழித்து விடும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

ஆகவே இவ்வாறான சம்பவங்கள் மக்களை அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மலையகத்தில் அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது மிக கவலைக்குரிய விடயமாகவு.

கடந்த மூன்று தினங்களுக்குள் ஹற்றன், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன. ஆகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




Source link

Related posts

கொவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

Rohan

மாகாணங்களுக்கு இடையில் பஸ் சேவை? l இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட பதில்

Rohan

மீண்டும் வெடித்துச் சிதறியது எரிவாயு சிலிண்டர்?? இன்று காலை இடம்பெற்ற அனர்த்தம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy