Tamil news Sri Lanka

இலங்கையை அண்மித்தது ஒமிக்ரோன்


இந்தியாவில் முதல் தடவையாக ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கர்நாடக பகுதியிலுள்ள இருவருக்கே ஒமிக்ரோன் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

66 மற்றும் 46 வயதான இரண்டு ஆண்களுக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்ஆபிரிக்காவிலிருந்து பரவ ஆரம்பித்த ஒமிக்ரோன் வைரஸ் தொற்று, தற்போது 20திற்கும் அதிகமான நாடுகளை தாக்கியுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்தியாவை ஒமிக்ரோன் வைரஸ் தற்போது தாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவிலிருந்து பெங்களுர் வருகைத் தந்த இருவருக்கே இந்த தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இருவருடன் இந்தியாவிற்கு வருகைத் தந்த பயணிகள் மற்றும் இவர்களுடன் தொடர்பினை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Source link

Related posts

4,000 வீடுகளை வழங்கினால் மாத்திரமே, 10,000 வீடுகள் மலையகத்திற்கு?

Rohan

நிலுவை மின்சார கட்டணத்தை செலுத்த நிவாரண காலம்

Rohan

இலங்கையில் 5 மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy