Tamil news Sri Lanka

கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் (PHOTO) – Trueceylon News (Tamil)


யாழ்ப்பாணம் நகரை அண்மித்துள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் − கோட்டை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்ணுதலை நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (29) அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் கொட்டடி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

நாட்டின் சில பகுதிகளில் அரிசி தட்டுப்பாடு – Trueceylon News (Tamil)

Rohan

அபுதாபி பயங்கரவாதத் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பா?

Rohan

கிளிநொச்சியிலிருந்து கதிர்காமம் பயணித்த பஸ் விபத்தில் 17 பேர் காயம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy