Tamil news Sri Lanka

மீண்டும் வெடித்துச் சிதறியது எரிவாயு சிலிண்டர்?? இன்று காலை இடம்பெற்ற அனர்த்தம்


பன்னிப்பிட்டிய – கொட்டாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் அனைத்து விதமான சர்வதேச தரங்களுக்கும் அமைவாகவே, தமது எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதா லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் விநியோக பிரிவின் பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன விளக்கமளித்தார். (TrueCeylon)



Source link

Related posts

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

Rohan

இன்று (24) முதல் திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு முழுமையான அனுமதி (பட்டியல் இணைப்பு)

Rohan

கொழும்பில் தமிழ் ஊடகவியலாளரின் வாகனம் திருட்டு (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy