Tamil news Sri Lanka

“சஜித் மீது குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம்” சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு


கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என தகவல் வழங்கிய நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் பிள்ளை எனும் குறித்த நபரை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நேற்று கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல உத்தரவிட்டார்.

கடந்த 9 ஆம் திகதி, சஜித் பிரேமதாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி, “எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்கு வந்துள்ள நபர் ஒருவர் அங்கு வாயிலில் இருந்த நபரிடம் எழுதப்பட்ட ஒரு கடதாசியை கொடுத்து விட்டு சென்றுள்ளதாகவும், அதில் நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் இடையே, சஜித் பிரேமதாஸ மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்படும் என எழுதப்பட்டிருந்ததாகவும்” கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை செய்திருந்தார்.

இதனையடுத்து அந்த நபரை கைது செய்த பொலிஸார் அவரிடமிருந்து பல்வேறு விடயங்கள் எழுதப்பட்ட சிறு சிறு கடதாசிகள் பல மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைத்த நீதிவான், அவரது மன நல மருத்துவ அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார்.

எனினும் நேற்று (24) அவ்வறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே சந்தேக நபரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டது. (TrueCeylon)



Source link

Related posts

டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவுனர் பதவி விலக தீர்மானம்

Rohan

யாழ் பாடசாலைகள் நாளையும் பூட்டு – Trueceylon News (Tamil)

Rohan

நேற்று (02) வானில் பறந்து வந்தது என்ன? − கொழும்பு பல்கலைக்கழகம் தெளிவூட்டியது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy