Tamil news Sri Lanka

BREAKING NEWS :- செயற்கை உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி


செயற்கை உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (24) கலந்துக்கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே இதனைக் குறிப்பிட்டார்.

செயற்கை உர இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என அவர் கூறினார்.

இதன்படி, செயற்கை உரத்தை தனியார் துறையினரும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படப்பட்ட செயற்கை உர இறக்குமதிக்கு தடை விதிக்கும் வர்த்தமானி இன்று முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் செயற்கை உரத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யாது என விவசாய அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், செய்கை உர நிவாரணத்தையும் அரசாங்கம் வழங்காது என அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், பசுமை விவசாயமே அரசாங்கத்தின் கொள்கை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிடுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து மூடப்படுகின்றதா? – Trueceylon News (Tamil)

Rohan

இன்றும் (26) எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

திருகோணமலையில் இடம்பெற்ற பேரனர்த்தம்! மூன்று பேர் சற்றுமுன் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy