Tamil news Sri Lanka

பிரபாகரனை விட அதிகம் தாக்கப்பட்ட அமைச்சர் யார்? – அமைச்சரே ஏற்றுக்கொண்டார்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை விடவும், தானே மக்களிடம் அதிக தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

செயற்கை உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்ததாக அவர் கூறினார்.

இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டங்களில் தனது உருவ பொம்மைகளை விவசாயிகள் எரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் உருவ பொம்மைகள் கூட, இவ்வாறு இதுவரை எரிக்கப்படவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார். (TrueCeylon)



Source link

Related posts

நாடு முழுவதும் அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும்

Rohan

மலையகத்தின் ஒரே இடத்தில் ஐந்து வயதுக்கு குறைவான 27 சிறார்களை தாக்கியது கொவிட் – சிறுவர் இல்லம் அபாயத்தில்

Rohan

வாகனங்களில் 3-4 பேர் கட்டாயம் பயணிக்க வேண்டும் – முன்வைக்கப்பட்டுள்ள புதிய யோசனை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy