Tamil news Sri Lanka

பஹல கடுகண்ணாவ வீதி எவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் மூடப்படும்?


கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசத்தை அண்மித்து, சுமார் 75 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் பட்சத்தில், அந்த பகுதியூடான போக்குவரத்தை மீண்டும் தடை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தீர்மானிக்கும் பட்சத்திலேயே, இந்த வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்படும் என அவர் கூறினார்.

பஹல கடுகண்ணாவ பகுதியில் ஒரு வழி போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த வீதியை மீள மூடுவதற்கு இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

சந்திம ஜீவந்தர வெளியிட்ட முக்கிய தகவல் – Trueceylon News (Tamil)

Rohan

இந்திய அணி வெளியேறியது. – Trueceylon News (Tamil)

Rohan

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy