Tamil news Sri Lanka

பல இடங்களில் 100 MM மழை வீழ்ச்சி (முழு விபரம் இணைப்பு)


இலங்கையின் தென்கிழக்கு வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலவுகின்ற குழப்ப நிலையானது, எதிர்வரும் சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவிக்கின்றார்.

இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அவர் கூறுகின்றார்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யும் என அவர் கூறுகின்றார்.

தென்கிழக்கு பகுதியில் தாழமுக்கம் ஏற்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடல்சார் தொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (TrueCeylon)




Source link

Related posts

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விசேட செய்தி

Rohan

எவ்வித மாற்றமும் இல்லை – ஜனாதிபதி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

சஹ்ரானின் உதவியாளர்களுடன் தொடர்பு! ஒருவர் அதிரடி கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy