Tamil news Sri Lanka

பதவி விலக தீர்மானித்தார் மஹிந்த – Trueceylon News (Tamil)


தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, சபையில் இன்று (23) அறிவித்தார்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக பதவி பொறுப்பேற்கவுள்ளமையினால், தான் எதிர்வரும் சில தினங்களில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த சமரசிங்கவின் பதவி வெற்றிடத்திற்கு, களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான மஞ்ஜுல லலித் வர்ணகுமார தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மஞ்ஜுல லலித் வர்ணகுமார 46,542 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தார்.

மஞ்ஜுல லலித் வர்ணகுமார, மதுராவல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் என்பது குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு! இலங்கைக்கு பாதகமா?

Rohan

இன்று (20) முதல் இவர்களுக்கும் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி

Rohan

BREAKING NEWS; எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமானது ஐ.ம.சக்தியின் மாபெரும் போராட்டம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy