Tamil news Sri Lanka

திருகோணமலை அனர்த்தம்! பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டை அடித்து நொருக்கி மக்கள்


திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த வீடு மற்றும் வீட்டின் நுழைவாயில் என்பன கடுமையாக சேதமடைந்துள்ளன.

குறிஞ்சாக்கேணியில் பாலம் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், இன்று காலை மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் மூழ்கியதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் நான்கு பேருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Source link

Related posts

மதுபானசாலைகளை நடத்திச் செல்வது குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Rohan

சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார் இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர்

Rohan

தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் சந்திப்பு நாளை (27)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy