Tamil news Sri Lanka

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது ஏன்? அமைச்சர் பகிரங்கம்


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு மேற்கொண்ட தீர்மானம் திடீரென மேற்கொண்டதல்ல என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வெளிநாட்டு செலாவணியை முகாமைத்துவம் செய்துகொள்வதற்காகவே மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்கவே சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களான சமிந்திர விஜேசிறி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் இயற்கை திரவ எரிவாயு விநியோகத்தின் ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நான் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.



Source link

Related posts

சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பஹ்ரைன்

Rohan

மின் ஊழியர்களின் அதிரடி அறிவிப்பு நாளை? – Trueceylon News (Tamil)

Rohan

சுற்றிவளைப்புகள் தொடரும்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிரடி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy