Tamil news Sri Lanka

LJEWUவிற்கு முன்னுரிமை வழங்கிய CWC – முதலாளிமார் சம்மேளனத்துடனான இன்றைய பேச்சுவார்த்தை


முதலாளிமார் சம்மேளனத்திற்கும், மலையக தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (22) இடம்பெற்றுள்ளது.

கூட்டு உடன்படிக்கை சர்ச்சை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நடைபெற்ற முதலாவது சந்திப்பு இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி சார் விடயங்கள் குறித்து, இன்றைய தினம் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தன.

இன்றைய சந்திப்பில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னுரிமை வழங்கி, பேச்சுவார்த்தைகளை நடத்த இடமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் குறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னுரிமை வழங்கி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தைகளை இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக நடத்துவதற்கும் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

போத்தலில் சிறுநீர் கழிக்கும் இலங்கை MP – Trueceylon News (Tamil)

Rohan

30 வயதுக்குட்பட்ட ஆண் உட்பட 22 பேர் மரணம் – Trueceylon News (Tamil)

Rohan

மின் ஊழியர்களின் அதிரடி அறிவிப்பு நாளை? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy