Tamil news Sri Lanka

வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று


2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, ஏழு நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்று 22ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை 23ஆம் திகதி முதல் குழு நிலையிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதம், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

T20 உலகக் கிண்ண போட்டி ஆரம்பத்தில் உயிரிழந்த முக்கிய நபர்

Rohan

இலங்கை விரையும் ஐ.நாவின் உயரதிகாரி! – Trueceylon News (Tamil)

Rohan

ஒமிக்ரோன் அச்சத்தில் எல்லையை மூடிய முதல் நாடு?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy