Tamil news Sri Lanka

மத்திய மாகாணத்தை அதிர வைத்துள்ள அறிக்கை! 8 மாதங்களில் 11 பெண்கள் கொலை, 94 சிறுவர் துஷ்பிரயோகம்


2021ஆம் வருடத்தின் முதல் 8 மாத காலப் பகுதியில் மத்திய மாகாணத்தில் 11 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதுடன், 94 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக மத்திய மாகாண சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையிலான முதல் 8 மாத காலத்தில் இச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக மத்திய மாகாண சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அதிகாரி திருமதி ஜானகி செனவிரத்ன இத் தகவல்களைத் வெளியிட்டார்.

குறித்த காலத்தினுள் சிறுவர்களைத் தாக்கி காயப்படுத்திய 27 சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

இக்காலப் பகுதியில் பெண்கள் மீதான 12 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதே காலப் பகுதியில் 11 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதுடன் இவற்றில் 04 கொலைச் சம்பவங்கள் நுவரெலியா பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளன. கண்டி பொலிஸ் பிரிவில் பெண்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் 04 பதிவாகியுள்ளன.

கொவிட் வைரஸ் பரவல் நிலை காரணமாக பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் என்பன இடம் பெறாதிருந்த பின்னணியில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இலக்கான சம்பவங்கள் பெற்றார்களின் பாதுகாப்பில் பிள்ளைகள் இருந்த காலத்தில் என்பதையும் இது தொடர்பில் பெற்றார்கள் விசேட கவனம் செலுத்துதல் அவசியம்.



Source link

Related posts

தமிழ் அரசியல் கைதிகள் மிக விரைவில் விடுதலை! வவுனியாவில் ஞானசார தேரர்

Rohan

உலகை அச்சுறுத்தும் A.30 வைரஸ் இலங்கையில்? – Trueceylon News (Tamil)

Rohan

24 மணிநேரத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy