Tamil news Sri Lanka

பூஜித் ஜயசுந்தர மீது 855 குற்றச்சாட்டுக்கள் – Trueceylon News (Tamil)


ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக போதியளவான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தவிர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (22) வாசித்து, கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இர்ஷடீன் ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று (22) இடம்பெற்றன.

இதன்போது முன்னாள் பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராகவும் 855 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று பிறபகல் இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

ரசிகர்களுக்கு நாமல் ராஜபக்ஸ அறிவித்த மகிழ்ச்சியான செய்தி – Trueceylon News (Tamil)

Rohan

உலகிலேயே மிக பெரிய இரத்தினக்கல் இலங்கையிலிருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்டது

Rohan

ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல் l இராணுவத்தின் பதில்? (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy