Tamil news Sri Lanka

இறக்குவானைக்குள் புகுந்த கொவிட் – உருவானது புதிய கொத்தணி


இரத்தினபுரி – இறக்குவானை பகுதியில் கொவிட் கொத்தணியொன்று உருவாகியுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.

இதன்படி, இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறக்குவானை பொலிஸ் நிலையத்தின் கடமைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இறக்குவானை பகுதியிலுள்ள சுமார் 40திற்கும் அதிகமான குடும்பங்களிலுள்ள சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)



Source link

Related posts

சிறைக்குள் G.C.E (O/L) பரீட்சையில் சித்தியடைந்த தமிழ் அரசியல் கைதி

Rohan

கொவிட் தடுப்பூசி செலுத்தினாலும், மிக கவனமாக இருக்க வேண்டியது ஏன்? –

Rohan

உலகின் அதிசய தீவில் முதன்முதலில் பரவியது கொரோனா!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy