Tamil news Sri Lanka

வாகனங்களில் 3-4 பேர் கட்டாயம் பயணிக்க வேண்டும் – முன்வைக்கப்பட்டுள்ள புதிய யோசனை


வீதிகளில் பயணிக்கும் வாகனமொன்றில் குறைந்தது 3 அல்லது 4 பேரேனும் பயணிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

குருநாகல் பகுதியில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் இல்லாமை மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு காணப்படுகின்ற பிரச்சினைகளை கருத்திற் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வீதிகளில் வாகனமொன்று பயணிக்குமானால், அந்த வாகனத்தில் கட்டாயம் 3 அல்லது 4 பயணிகள் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

500 மில்லியன் டொலரை தேடிக்கொள்ள முடியாது, பல நாடுகளிடம் கடன் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எதிர்வரும் காலங்களில் இதற்கு மேல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

அதனால், வாகனங்களில் குறைந்தது 3 அல்லது 4 பேர் பயணிக்கும் சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

13,000ஐ தாண்டியது கொரோனா உயிரிழப்புக்கள்

Rohan

வெளிநாட்டிலிருந்து வந்த கணவரின் தாக்குதலில் உயிரிழந்த மனைவி

Rohan

மகாவளி ஆற்றில் வீழ்ந்த கார் l இருவர் மீட்டு : ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy