Tamil news Sri Lanka

பஹல கடுகண்ணாவ பகுதியின் தற்போதைய நிலைமை – Trueceylon News (Tamil)


கண்டி − கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியிலுள்ள பிரதான வீதி மற்றும் ரயில் மார்க்கம் என்பன தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாய சமிக்ஞை கட்டமைப்பை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் R.M.S.பண்டார தெரிவிக்கின்றார்.

கடந்த காலங்களில் பெய்ந்த தொடர் மழை காரணமாக, குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, குறித்த பகுதியூடான போக்குவரத்து கடந்த 10ம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு தடை செய்யப்பட்டு, அந்த பிரதேசத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மழை குறைவடைந்துள்ள நிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்த வீதியூடான போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பிய போதிலும், குறித்த பகுதி தொடர்பில் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)



Source link

Related posts

ஒமிக்ரோன் இலங்கையிலும் பரவியுள்ளதா? ஹேமந்த ஹேரத் தகவல்

Rohan

கொழும்பை அண்மித்து கடும் வாகன நெரிசல் – Trueceylon News (Tamil)

Rohan

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விசேட செய்தி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy