Tamil news Sri Lanka

கொழும்பில் தமிழ் ஊடகவியலாளரின் வாகனம் திருட்டு (PHOTOS)


கொழும்பு − கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று (21) முற்பகல் முச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை IOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளார்.

சுயாதீன தமிழ் ஊடகவியலாளரான ஷிராஜ் மொஹமட்டின் முச்சக்கரவண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் வைக்கப்பட்டிருந்த அவரது கமரா உள்ளிட்ட முக்கிய பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஷிராஜ் மொஹமட் தெரிவிக்கின்றார்.

CP-ABC 7482 என்ற இலக்கத்தை கொண்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கரவண்டி குறித்த தகவல் அறிந்தவர்கள் 077−3106677 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தரவும்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

கிண்ணியா பேரனர்த்தம்! அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

Rohan

நாளாந்த கொவிட் மரணங்கள் மீண்டும் 20 ஐ எட்டியது

Rohan

ஜனாதிபதி ஸ்கொட்லாந்து பயணித்தார் (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy