Tamil news Sri Lanka

காலி மைதானத்தில் காயமடைந்த மேற்கிந்திய அணி வீரர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் (VIDEO)


இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜெரம் சோலசானோவிற்கு, முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் இல்லாது போகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்த நிலையில், இலங்கை அணி வீரர் திமுத் கருணாரத்னவின் துடுப்பாட்டத்தின் போது, ஜெரம்  சோலசானோ காயமடைந்துள்ளார்.

ஜெரம் சோலசானோவிற்கு, காலியில் ஸ்கேன் பரிசோதனைகள் நடத்தப்பட்டதை அடுத்து, அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜெரம் சோலசானோவின் உடல் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள போதிலும், அவருக்கு விளையாடுவதற்கான இயலுமை தற்போதைக்கு கிடையாது என தெரிய வருகின்றது.

எவ்வாறாயினும், இது குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. (TrueCeylon)





Source link

Related posts

சஹரான் இறுதியாக பேசிய வீடியோ வெளியானது (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

வத்தளையில் பாரிய தீ l தீயணைப்பு பிரிவு விரைந்தது

Rohan

பின்னணி என்ன? – தடையின்றி எப்போது எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்? (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy