Tamil news Sri Lanka

இந்த வகை மதுபான போத்தல்களுக்கு இலங்கையில் தடை


180 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட மதுபான போத்தல்களை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த மதுபான போத்தல்கள் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், சூழலுக்கு வீசப்படுகின்றமையினாலேயே, இந்த மதுபான போத்தல்களை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 கோடிக்கும் அதிகமான போத்தல்கள் சூழலுக்கு வீசப்பட்டுள்ளதாக 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது.

இவ்வாறு வீசப்படும் போத்தல்களை மதுபான நிறுவனங்கள் மீள பெற்றுக்கொள்ளவோ அல்லது மீள சேகரிக்கவோ இல்லை என சுற்றாடல் அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த நிலையிலேயே, குறித்த மதுபான போத்தல்களை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் – Trueceylon News (Tamil)

Rohan

அமெரிக்காவில் முதன்முறையாக தனது பேத்தியை கண்டார் ஜனாதிபதி

Rohan

அதி அச்சுறுத்தலில் மலையக ரயில் மார்க்கம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy