Tamil news Sri Lanka

EU வின் நிபந்தனைகளை நிறைவேற்ற SL திட்டம் – Trueceylon News (Tamil)


ஜி.எஸ்.பி சலுகைகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்ற முழுமையான திட்டமொன்றை செயற்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

ஐரோப்பிய தூதுவரை இவ்வாரம் சந்திக்க இருக்கிறேன். இது தொடர்பில் பிரச்சினை வராதென முழுமையாக நம்புகிறேன்.

தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதெனவும் அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி சலுகை தொடர்பில் ஆராய ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழு அண்மையில் இங்கு வந்தது. என்னுடன் விவரமாக ஆராய்ந்தனர்.

இந்த சலுகை அன்பளிப்பல்ல. அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

இது தொடர்பில் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய போது நாம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முழுமையான திட்டமொன்றை செயற்படுத்தி வருகிறோம்.

அதன் முன்னேற்றம் தொடர்பில் விளக்கினோம்.எதிர்கால திட்டங்களையும் முன்வைத்தோம்.

இந்த சலுகையை நிறுத்தவதால் இலங்கை அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாது.சகல மக்களுக்கும் தான் பாதிப்பு ஏற்படும்.

ஜி.எஸ்.பி சலுகை ஊடாகவே எமது மீன் வளம் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஜி.எஸ்.பி சலுகையை நிறுத்துவது தற்போதைய நிலையில் நியாயமானதல்ல என்றார்.



Source link

Related posts

6 வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் மேற்கிந்திய தீவுகளை இன்று (21) சந்திக்கும் இலங்கை

Rohan

இலங்கையில் முதல் தடவையாக சிறார்களுக்கு தடுப்பூசி இன்று (24) முதல்

Rohan

பூரண குணமடைந்து வீடு திரும்பினார் மனோ கணேஷன் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy