Tamil news Sri Lanka

2022 வரவு செலவுத்திட்டத்தில் மலையக வீட்டுத் திட்டத்திற்கு உண்மையில் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது?


மலையக வீட்டுத்திட்டத்திற்காக தனது அமைச்சுக்கு 2471 மில்லியன் ரூபா, 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த தொகைக்கு மேலதிகமாகவே, 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பது குறித்து, தனது அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது தெளிவூட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தாம் மூன்று விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிடுகின்றார்.

மலையகத்தில் பின்னடைவை சந்தித்துள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய மூன்று துறைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மலையகத்திற்கு வீட்டு உரிமையை விடவும், காணி உரிமையே அவசியமானது என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார். (TrueCeylon)

 

 



Source link

Related posts

கண்டி − கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ இன்று திறப்பு

Rohan

40க்கும் குறைவான கொரோனா மரணங்கள்

Rohan

வெளியானது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy