Tamil news Sri Lanka

“நல்லூர் கோவிலை இடித்து மலசலகூடம் அமைப்பேன்” என்ற அருண் சித்தார்த்தன் கைது


இராணுவத்தின் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர்.

பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்.

இதன் போது தான் இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

இவர் நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன் என்றும் இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

யொஹானியை சந்தித்தார் இந்திய இராணுவ தளபதி (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

சிம்பு ரசிகர்களுக்கு காத்திருந்த மற்றுமொரு அதிர்ச்சி தகவல் – Trueceylon News (Tamil)

Rohan

பாலத்தில் தடுமாறி வீழ்ந்த MP (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy