இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 22 பேரை கொண்ட இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை அணித் தலைவராக திமுத் கருணாரத்ன விளையாடவுள்ளார்.
அத்துடன், இலங்கை அணியின் முக்கிய வீரர்களான அஞ்சலோ மெத்தீவ்ஸ், தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால் ஆகியோரும் விளையாடவுள்ளனர்.
ICC இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியில் தமது திறமையை வெளிப்படுத்திய ஷரித் அசலங்கவின் பெயரும், டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியலில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (TrueCeylon)