Tamil news Sri Lanka

“மனோ கணேசனுக்கு கொரோனா, நீங்களும் முகக்கவசம் அணியுங்கள்” என்ற கருத்தால் சபையில் சர்ச்சை


எதிர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினா்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியதால் சபையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்துக்கு பதில் வழங்கி ஹர்ஷன ராஜகருணா,

“ஜனாதிபதியின் இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் விசேட நிகழ்வுகள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்வில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருந்தாா்கள்.

அதன்போது கொரோனோ தொற்றுப்பரவல் ஏற்படாதா? எதிர்த் தரப்பினால் ஏற்பாடு செய்யப்படும் செயற்பாடுகளில் மாத்திரம் தொற்று பரவல் தீவிரமடைகின்றதா” என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு, பலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

“நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் காரணமாகவே முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினேன். வேறு காரணங்களுக்காக குறிப்பிடவில்லை” என்று குறிப்பிட்டாா். (TrueCeylon)



Source link

Related posts

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க

Rohan

2 – 18 வயது சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசிக்கு முதல் தடவையாக அனுமதி

Rohan

ஆசிரியர் சங்கம் தீர்மானத்தை அறிவித்தது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy