Tamil news Sri Lanka

பாடசாலையில் கொவிட் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டால், செய்ய வேண்டியது இது தான்?


பாடசாலைகளில் கொவிட் தொற்றாளர்கள் அல்லது கொவிட் தொற்றார்கள் என சந்தேகிக்கப்படுவோர் அடையாளம் காணப்படும் பட்சத்தில், அது குறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான சுகாதார வழிகாட்டியை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்களை (மாணவர்கள்/ஆசிரியர்கள்/கல்வி சாரா ஊழியர்கள்/வேறு நபர்கள்) பாடசாலையின் வேறொரு இடத்தில் தனித்து வைக்க வேண்டும் என அந்த வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் மாணவர் என்றால், அது குறித்து உடனடியாக பெற்றோருக்கோ அல்லது பொறுப்பாளருக்கோ அறிவிக்க வேண்டும்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் அடையாளம் காணப்பட்ட நபரை, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க பாடசாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

சீன உரத்தில் ஆபத்தா?? கொழும்பில் உள்ள சீன தூதரகம் அவசர அறிக்கை

Rohan

பிரித்தானியாவில் 4 இலங்கையர்களின் உயிர்களை காவுக்கொண்ட தீ (PHOTOS)

Rohan

T20 உலகக் கிண்ணம் :- இன்றைய போட்டி இலங்கை வசமானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy