கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 11 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கொரோனா தொற்றுக்குள்ளான அதிகாரிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை வழங்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனா்.
அவர்களுடன் நெருங்கிய தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனா்.
பளை பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சேவைகள் கடுமையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றி முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனா். (TrueCelon)