Tamil news Sri Lanka

பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டி வெளியானது


நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

பாடசாலை மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில், செயற்படும் விதம் தொடர்பிலும் புதிய சுகாதார வழிகாட்டியில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், கொவிட் கொத்தணிகள் உருவாகும் என அச்சம் காணப்படுகின்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். (TrueCeylon)



Source link

Related posts

இலங்கையில் சீமெந்துக்கு ஏற்பட்டுள்ள நிலை!!!

Rohan

BREAKING NEWS :- ரிஷாட் பதியூதீன் எடுத்த அதிரடி தீர்மானம்

Rohan

பிரபல தென்னிந்திய நடிகரும், நடன இயக்குநருமான சிவசங்கர் உயிரிழப்பு (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy