கொள்ளுப்பிட்டி – காலி வீதியில் அமைந்துள்ள கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வட்டரக்க – பாதுக்கை சிறைச்சாலையின் கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
பாதுக்கை சிறைச்சாலை அதிகாரியொருவரினால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருநாகல் – வேவல்வல போபிட்டியவை சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய கைதியை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.